×

சிந்தை குளிர வைப்பார் சிந்தாமணிநாதர்

வாசுதேவநல்லூர், நெல்லைசிவபக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன்.ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், வாசுதேவநல்லூர் சிந்தாமணி ஸ்தல சிவனிடம் வேண்டிக்கொள் நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது. பின்பு மன்னன் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோயில் கட்டினான். பிருங்கி மகரிஷி, ஆலயத்தின் உற்சவராக இருக்கிறார். அர்த்தநாரீஸ்வரரை ‘சிந்தாமணிநாதர்’ என்று அழைக்கின்றனர். அம்பாளை ‘இடபாகவல்லி’ என்கின்றனர்.இத்தலத்தில் ஆனி பிரம்மோற்ஸவத்தின்போது சிவனையும் அம்பாளையும் அருகருகில் வைப்பார்கள். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் வகையில் பாவனை செய்வார்கள். இதனால், பார்வதி கோபமடைவது போலவும், சிவன் அர்த்தநாரியாக அம்பாளை ஏற்பதுமான சடங்குகள் செய்யப்படும். பின்னர், பிருங்கி மனம் திருந்தி அர்த்தநாரியை வழிபடுவார். இந்த வைபவம் மிக விசேஷமாக நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி, ‘கருப்பை ஆறு’ (கருப்பா நதி) என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியன்று விசேஷ பூஜை நடக்கிறது.இவருக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, சித்திரை மாதப் பிறப்பன்று காலையில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், ‘சிந்தாமணிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு ‘சிந்தை மரம்’ என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளிய மரம் ஆகும். இத்தல புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.தொகுப்பு: ச. சுடலைகுமார்

The post சிந்தை குளிர வைப்பார் சிந்தாமணிநாதர் appeared first on Dinakaran.

Tags : Chintamaninathar ,Vasudevanallur ,Kulasekaran ,Ravivarman ,Nellaisivabhakti ,Shiva ,Sindhamaninathar ,
× RELATED வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு...